AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அவங்க ரெண்டுபேர் லவ் ஓவர்-ஆ இருக்கு.. சூர்யா – ஜோதிகா குறித்து பேசிய கார்த்தி!

Karthi Funny Speech: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவர் சமீபத்தில் நடைபெற்றிருந்த சூர்யாவின் சீன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் குறித்து காமெடியாக பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

அவங்க ரெண்டுபேர் லவ் ஓவர்-ஆ இருக்கு.. சூர்யா – ஜோதிகா குறித்து பேசிய கார்த்தி!
சூர்யா ஜோதிகா பற்றி கார்த்திImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Nov 2026 12:16 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் நடிகராக இருந்துவருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. மேலும் இவர் தமிழ் இயக்குநர்களில் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நிலையில், தற்போது தெலுங்கு இயக்குநர்களுடனும் படங்களில் இணைய தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் சர்தார் 2 (Sardar 2) . இந்த படமானது கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குநர் கல்யாண் (Kalyan Shankar) இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்துவருகிறார். மேலும் இயக்குநர் தமிழ் (Director Tamizh) இயக்கத்தில் மார்ஷல் (Marshal Movie) என்ற படத்தில் நடித்துவிட்டு நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.

நடிகர் கார்த்தி சமீபத்தில் நடைபெற்றிருந்த சூர்யாவின் சீன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய அவர், சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதலால் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து நகைச்சுவையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நக்கலாக பேசிய முனியம்மாளிடம் ஆநாகரீகமாக நடந்துகொள்ளும் ஜேசன் – இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ!

சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் குறித்து நகைச்சுவையாக பேசிய கார்த்தி:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய கார்த்தி, “எதோ சர்ப்ரைஸ்-னு அண்ணி எல்லாரையும் வெளிநாடு ட்ரிப் கூட்டிட்டு போனாங்க. அங்க போனாதான் தெரியுது அவங்க திருப்பி கல்யாணம் பண்ணப்போறாங்கனு. அவங்க ரெண்டுபேர் லவ் ஓவர்-ஆ போயிடு இருக்கு. அங்க வந்த மற்ற ஜோடிகளுக்கு எல்லாமே தர்மஅடி.

இதையும் படிங்க: தி ஒன் டைட்டில் வேணுமா? ரசிகர்களிடையே ஓபனாக கேட்ட சூர்யா!

எனக்கு விழுந்த அடியை வெளியே சொல்லமுடியாது, அப்படி ஒரு அடி. பல வீட்டில் அதை பார்த்ததற்கு பிறகு சோறு கிடைக்கவில்லையாம். “எப்படி இருக்காங்க பாரு.. நீயும் இருக்கியேனு” பலர் வீட்டில் சோறு கிடைக்கவில்லையாம்” என அதில் அவர் காமெடியாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதல் குறித்து கார்த்தி பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ:

நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா இருவருமே சகோதரர்களாக பிரியாமல் சினிமாவிலும் சரி, வீட்டிலும் சரி இருந்துவருகிறார்கள். இவர்கள் இருவரின் அண்ணன் மற்றும் தம்பி உறவு பல ஆண்டுகளாக சினிமாவிலும் பேசப்பட்டுவருகிறது. இவர்கள் இருவருமே அவர் அவர் படங்களின் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வது வழக்கமே. அதுபோல சூர்யாவின் சீன் பட நிகழ்ச்சியில் கார்த்தி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us