AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Suriya: தி ஒன் டைட்டில் வேணுமா? ரசிகர்களிடையே ஓபனாக கேட்ட சூர்யா!

Suriya on The One Title: தமிழ் மக்கள் மத்தியில் தி ஒன் என்று அழைக்கப்பட்டுவரும் ஸ்டார் நடிகராக இருந்துவருபவர்தான் சூர்யா. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் சீன். இந்த படத்தின் இசைவெளியீட்டின்போது ரசிகர்களிடையே சூர்யா கேட்ட கேள்வி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Suriya: தி ஒன் டைட்டில் வேணுமா? ரசிகர்களிடையே ஓபனாக கேட்ட சூர்யா!
சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Nov 2026 18:52 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தமாக 46 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இந்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியிருந்த நிலையில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு முன் கருப்பு (Karuppu) என இந்த ஆண்டிலே மொத்தமாக இதுவரை இரு திரைப்படங்கள் வெளியாகிவிட்டது. இந்த வரிசையில் 3வது திரைப்படமாக வெளியாக தயாராகிவருவதுதான் சீன் (Scene Movie). இதை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்க, சூர்யா மற்றும் ஜோதிகா (Jyotika) இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படமானது கலக்கல் காமெடி மற்றும் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று (31/10/2026) இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடைபெற்றிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் சூர்யா, தனது அடைமொழி குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க இதுதான் காரணம் – நடிகை நஸ்ரியா நசீம்

தனது அடைமொழி குறித்து பேசிய சூர்யா:

நிகழ்ச்சி மேடையில் பேசிய சூர்யா அதில், “உங்களுக்கு உண்மையிலேயே ‘தி ஒன்’ என்ற டைட்டில் வேண்டுமா..? நான் அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் விரும்புகிறீர்களா..? ஓகே.. இந்தப் படம் ஒரு புத்தம் புதிய அனுபவத்தைத் தரும்.. கொலை, மர்மம் மற்றும் பைத்தியக்காரத்தனம்.

இதையும் படிங்க: சீன் பட கதை குறித்து ஆன்லைனில் பரவும் கருத்து.. நச் பதில் கொடுத்த இயக்குநர் ஜித்து மாதவன்!

சிரிப்பால் நிரம்பி வழியும்.. சக்தி சொன்னதையெல்லாம் மறந்துவிடுங்கள்.. ஒரு புதிய மனதுடன் வாருங்கள்.. ஜாலியாக வந்துடு.. ஜாலியாக படம் பார்த்துட்டு போலம்.. இது ஒரு அழகான தீபாவளியாக இருக்கும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களிடம் தி ஒன் நேம் குறித்து சூர்யா பேசியது தொடர்பான வீடியோ பதிவு:

சூர்யாவின் இந்த சீன் திரைப்படமானது அதிரடியான கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லேன், ஆனந்தராஜ் மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சிறப்பான இந்த திரைப்படமானது வரும் 2026 ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us