Scene: பாலிடிக்ஸ் பாலிடிக்ஸ் சேர போறேன்.. கலக்கலாக வெளியானது சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ட்ரெய்லர்!
Suriya Scene Movie Trailer: தென்னிந்திய திரையுலகில் இந்த 2026ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த சூர்யாவின் திரைப்படம்தான் சீன். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது அதிரடி கிரைம் திரில்லர் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு சில தினங்களே உள்ள நிலையில், அதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடிவரும் ஸ்டார் நடிகர்களில் ஒருவர்தான் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரைக்கும் மொத்தம் 46 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் மட்டுமே இரு படங்கள் வெளியாகியிருக்கிறது இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (Director RJ Balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu), வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons)என இரு படங்கள் வெளியாகி பான் இந்திய வெற்றியை பெற்றிருந்தது. இதையடுத்து 3வது வெளியாக தயாராகியுள்ள புதிய திரைப்படம்தான் சீன் (Scene Movie). ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இப்படத்தை இயக்க சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா (Nazriya) நடித்துள்ளார்.
இப்படமானது க்ரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026 நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. அந்த விதத்தில் இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: டோரதி படத்தின் ஒரிஜினல் கிளைமேக்ஸ் அப்படிதான் – கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்!
சூர்யாவின் சீன் திரைப்படத்தின் அதிரடி ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த ட்ரெய்லரில் நடிகர் சூர்யா டிஎஸ்பி போலீஸ் அதிகாரியாக இருந்து வெளியிலிருந்து வெளியேறிய நபராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யா லீட் நாயகனாக கலக்கல் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நஸ்ரியா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக இருக்கும் நஸ்லேன் மற்றும் சூர்யாவுக்கும் இடையே உள்ள மோதல் குறித்து இப்படம் நகர்கிறது. கலக்கல் காமெடி, ஆக்ஷன் மற்றும் சிறப்பான படமாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சூர்யா மற்றும் நஸ்ரியாவின் சீன் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
#SCENE Trailer Is Out Now! 💥
https://t.co/vbPDm6zBPS
Worldwide In cinemas from November 6! #DiwaliRelease 🧨
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @GokulamMovies @SakthiFilmFctry @NVRCinema @MMovies4u @vkfilmsrelease @pharsfilm @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @ursvamsishekar @pro_sabari @prosathish
— Zhagaram Studios (@ZhagaramOffl) October 31, 2026
சீன் திரைப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:
இந்த சீன் திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லேன், ராஜ்ப்ரியன் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா இன்பராஜ் என்ற போலீஸ் அதிகரிக்கவும், நஸ்ரியா மாயா என்ற பெண்ணாகவும் மற்றும் நஸ்லேன் ஈஸ்வரன் என்ற சைக்கோ கொலையாளியாகவும் நடித்துள்ளனர். இந்த படமானது முழுக்க க்ரைம் திரில்லர் மற்றும் ஆக்ஷன் காமெடி போன்ற கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அது நானே எடுத்த முடிவு.. மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக தனது அர்ப்பணிப்பு குறித்து பேசிய ரெஜினா கசாண்ட்ரா!
இந்த படத்திற்கு இசையமைப்பார் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு.ஏ தர சென்சார் சான்றிதழை கொடுத்துள்ளது. அதன்படி 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இப்படத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 2026ம் ஆண்டில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் 3வது படம் என்ற நிலையில் நிச்சயம் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.