Karthik Subbaraj: டோரதி படத்தின் ஒரிஜினல் கிளைமேக்ஸ் அப்படிதான் – கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்!
Dorothy Movie Original Climax: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் டோரதி. இந்த படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தாலும், திரையரங்குகளில் நன்றாக ஓடியது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், டோரதி படத்தின் உண்மையான கிளைமேக்ஸ் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் டோரதி (Dorothy Movie). வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியிருந்த இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர்களாக ரிஷிகாந்த் (Rishikanth), கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) மற்றும் சனந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் 2026 செப்டம்பரில் வெளியாகியிருந்த நிலையில், ஆரம்பத்தில் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக இருந்தது. ஆனால் நாட்கள் போக போக இந்த படத்திற்கும் திரையரங்குகளில் வரவேற்பு இருந்தது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது சிறப்பாக அமைந்திருந்தது.
இந்த படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ள நிலையில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், டோராதி படத்தின் ஒரிஜினல் கிளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: எனது வாழ்நாள் முழுக்க தெலுங்கு சினிமாவுக்கு அதற்காக நன்றியோடு இருப்பேன் – ஸ்ருதிஹாசன்!
டோரதி படத்தின் ஒரிஜினல் கிளைமேக்ஸ் குறித்து பேசிய கார்த்திக் சுப்பராஜ்:
அந்த பேட்டியில் பேசியிருந்த கார்த்திக் சுப்பராஜ், “கார்த்திக் கதாபாத்திரம் சுப்புவை லாரியிலிருந்து இறக்கிவிடுவதிலே படத்தை முடிக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. சுப்புவை வாழவிட்ட ஒரு நல்லவன் போல அவன் தோன்றக்கூடாது. அது அதைப் பற்றியது அல்ல. படம் இப்போது முடியும் இடத்திலேயே முடிந்திருக்க வேண்டும். சுப்பு கார்த்தியை விட வலிமையானவன், ஆனால் சுப்புவை பொறுத்தவரை, இத்தனை நாளும் அவளுடன் பயணித்த ஒரே நபர் கார்த்திதான்.
இதையும் படிங்க: இது ஒரு தொடர்கதை அல்ல… ஓம் படம் பார்ட் 2 உருவாகுமா என்பது குறித்து ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!
அதனால், அவள் தன் உயிரைப் பறிக்க அவனை அனுமதிக்கிறாள் என்பதுபோல கமர்ஷியல் ஆக்ஷன் படமாக முடிக்க நினைத்தேன். ஆனால் இந்த படம் அது கிடையாது என நான் நினைத்தேன். மேலும் மக்களின் பார்வை அந்த கதாபாத்திரங்கள் மீது எவ்வாறு இருக்கும் என நான் எண்ணினேன். மேலும் வன்முறை ஒரு முடிவல்ல என்பதை நான் கூற நினைத்ததால். அந்த கிளைமேக்ஸை வைக்கவில்லை” என அவர் கூறியுள்ளார்.
டோரதி படத்தின் கிளைமேக்ஸ் மாற்றம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
https://t.co/75XpJx1KIw
— Laxmi Kanth (@iammoviebuff005) October 31, 2026
கார்த்திக் சுப்பராஜ் இந்த டோரதி படத்தை இயக்கியதற்கு பிறகு, தொடர்ந்து புதிய படத்திற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். அவர் அதர்வா மற்றும் உபேந்திரா ராவ்-வை வைத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி-காக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.