AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அப்ப இளையராஜா இல்லையா? விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தில் இசையமைப்பாளராக இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

G.V. Prakash joins Pocket Novel Movie: தமிழில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவந்த திரைப்படம்தான் பாக்கெட் நாவல். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. அந்த விதத்தில் இப்படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அப்ப இளையராஜா இல்லையா? விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தில் இசையமைப்பாளராக இணைந்த ஜி.வி.பிரகாஷ்!
பாக்கெட் நாவல் திரைப்படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Oct 2026 13:05 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி ஸ்டார் நடிகராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் பத்தா (Baththa Movie). இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்திலும், அட்லீயின் தயாரிப்பிலும் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது எமோஷனல் கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் (Thiagarajan Kumararaja) இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவந்த திரைப்படம்தான் பாக்கெட் நாவல் (Pocket Novel Movie). இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தை வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இத எதிர்பார்களையே… சிலம்பரசன் – கீர்த்திஸ்வரன் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை.. அடடே இவரா?

விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தில் ஜி.வி பிரகாஷ் இணைந்தது குறித்து வெளியான அறிவிப்பு:

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடித்துவரும் படம்தான் பாக்கெட் நாவல். இப்படத்தில் கன்னட பிரபல நடிகர் ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தி நிறைவடைந்தது. இப்படத்தின் அறிவிப்பின்போது இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தெய்வீக ஆல்பம்.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முழு பாடல் தொகுப்பு வெளியீடு!

அந்த வகையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளாராம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் இப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் வெகுவிரைவில் வெளியாகிவிடும் என வட்டாரங்கள் கூறுகிறது. அநேகமாக இந்த திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் அல்லது, 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us