AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதே குரலோடு திரும்பி வந்துட்டே-னு சொல்லு.. பிக் பாஸில் ரீ என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி.. போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

Vijay Sethupathi Bigg Boss: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 8வது வாரத்தின் நிறைவில் உள்ளது. கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக தொகுத்துவழங்கிய நிலையில், தற்போது விஜய் சேதுபதி மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுக்க வந்துள்ளார். மேலும் அவர் ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் வந்திருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியான விஷயம் காத்திருக்கிறது.

அதே குரலோடு திரும்பி வந்துட்டே-னு சொல்லு.. பிக் பாஸில் ரீ என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி.. போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
விஜய் சேதுபதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Oct 2026 14:32 PM IST

விஜய் டிவியில் (Vijay Tv) ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது இன்றுடன் (31/10/2026) 55வது நாளில் உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவழங்கிய நிலையில், கடந்த வாரத்தில் அவரின் குரல் பிரச்சனையின் காரணமாக மருத்துவ ஆலோசனையின்படி அவர் நிகழ்ச்சியை தொகுக்கவில்லை. அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த வாரத்தில் அவர் தொகுத்த நிலையில், ஜேசன், ரம்யா கிருஷ்ணனிடமே (Ramya Krishnan) ஏறி பேசியதுபோல பேசியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

அந்த விதத்தில் கடந்தவாரம் நடைபெற்றிருந்தது குறித்தும், ஜேசன் மற்றும் இந்த வாரத்தில் போட்டியாளர்கள் டாஸ்கில் விளையாடியது குறித்தும் அவர் நச்சுனு கேள்விகளை கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியான முதல் ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 2027 பொங்கலுக்கு குறிவைக்கும் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படம் – வெளியான அறிவிப்பு!

பிக் பாஸில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி:

தற்போது வெளியான ப்ரோமோவில், விஜய் சேதுபதி “நான் வந்துட்டேனு சொல்லு.. எப்படி குரலோடு போனேனோ.. அதே குரலோடு திருப்பி வந்துட்டேனு சொல்லு” என பஞ் டயலாக்குடன் இந்த ப்ரோமோவில் பேசியுள்ளார். மேலும் 2 வாரத்திற்கு முன்னாடி நான் பார்த்த வீடு இப்போ இல்ல. நிறைய கலைஞ்சிருக்காங்க.. புதிய நட்புகள் மாறியிருக்கிறது. ஒருத்தரை அடிமுட்டாள் என சொல்லும்போது.. அப்படி சொல்றவரு யாருனு இந்த உலகத்துக்கு தெரியணும் என இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 55வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது மொத்தமே 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்தில் கவ்பாய்ஸ் vs மாஃபியாஸ் என்ற டாஸ்கானது நடைபெற்றிருந்து. இந்த டாஸ்கில் கவ்பாய்ஸ் டீம் வெற்றிபெற்றிருந்த நிலையில், இந்த வாரத்தின் மோசமான போட்டியாளர்களாக தன்யா மற்றும் கரீஷ்மா இருவருமே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: அப்ப இளையராஜா இல்லையா? விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தில் இசையமைப்பாளராக இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

அவர்களுக்கு டிடிஃஎப் உதவி செய்த நிலையில், அதை வைத்தே ஒரு பெரிய சண்டை ஏற்பட்டிருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் சொந்த அணிக்குள்ளே பல சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் இருந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us