AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் முக்கிய வேடத்தில் இணையும் பிரபலம்.. அட இந்த நடிகரா?

Dare Devil Movie: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தில் கார் ரேஸராகவும் நடிகராகவும் இருந்துவருபவர் அஜித் குமார். இவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், டேர் டெவில் என்ற திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் குமாருடன் பிரபல நடிகர் முக்கியமான வேடத்தில் இணைவதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் முக்கிய வேடத்தில் இணையும் பிரபலம்.. அட இந்த நடிகரா?
டேர் டெவில் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 31 Oct 2026 15:43 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் லீட் நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படம் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான நிலையில், ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படதம் அஜித்தின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு தனது 64வது படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைவதாக அஜித் குமார் அறிவித்திருந்தார். இந்த படத்தின் அப்டேட்டுகள் கிட்டத்தட்ட 6 மாதங்களாக சிறிது சிறிதாக வெளியாகிவந்தது.

AK64 என அழைக்கப்பட்டுவந்த இந்த திரைப்படமானது பிறகு “டேர் டெவில்” (Dare Devil) என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் இறுதியில் உள்ள நிலையில், விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது. அந்த விதத்தில் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டோரதி படத்தின் ஒரிஜினல் கிளைமேக்ஸ் அப்படிதான் – கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்!

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்:

அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்படவுள்ளது. இந்த படத்திலும் அஜித் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் ஸ்ரீலீலா நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் ஒருவேளை இல்லையென்றால் நடிகை ப்ரீத்தி முகுந்தன் இப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: இத எதிர்பார்களையே… சிலம்பரசன் – கீர்த்திஸ்வரன் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை.. அடடே இவரா?

இந்த படத்தில் அஜித் குமாருடன் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு ஆரம்பத்தில் நடிகர் சத்யராஜ் பேசப்பட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நடிக்கவிருந்த வேடத்தில் நடிகரும், இயக்குனருமான ஆர். பார்த்திபன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் குமாரின் டேர் டெவில் படத்தில் முக்கிய நடிகர் இணைந்தது குறித்து வைரலாகும் பதிவு:

அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தை ஷாலினி அஜித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைப்பாளராக இசையமைக்கிறார். இந்த படமானது சுமார் ரூ 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் 2026 நவம்பர் 2ம் தேதியில் பூஜைகளுடன் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக 2026 நவம்பர் இறுதியில் ஆரம்பமாகும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us