உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்… வீடியோ வெளியிட்ட அஜித் குமார்!
Ajith Kumar Seeks Fans Support | கார் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போர்ச்சுகளில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு ரசிகர்களிடையே ஆதரவு கேட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அந்தப் படங்கள் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவடைந்தும் நடிகர் அஜித் குமாரின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை என்பது அவரின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தி வந்தாலும் மற்றொரு பக்கம் அஜித் குமாரின் கார் ரேஸிங் வெற்றி அவர்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அதன்படி நடிகர் அஜித் குமார் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் சிறு வயதில் இருந்தே ரேஸிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட நபராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தனது கார் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார். அந்த வகையில் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று அணியினருடன் பங்கேற்கும் கார் ரேஸிங்கில் வெற்றியைப் பெற்று தமிழ் நாட்டிற்கு மட்டும் இன்றி இந்திய மக்களுக்கும் பெருமை சேர்த்து வருகிறார் அஜித் குமார்.




உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்:
இந்த நிலையில் சமீபத்தில் அஜித் குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் போர்ச்சுகலில் உள்ள ஆட்டோட்ரோமோ இன்டர்நேஷனல் டூ அல்கார்வ் போர்ட்டிமோ சர்க்யூட்டில் வருகின்ற 09 மற்றும் 10 அக்டோபர் 2026-ம் ஆண்டில் இறுதிப் போட்டி நடைபெறுகின்றது. அப்போது நான் இங்குதான் இருப்பேன். உங்கள் ஆதரவு கட்டாயமாக எனக்கு வேண்டும். ஐ லவ் யூ ஆல் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதுவரை அஜித் குமார் இப்படி ஒரு வீடியோ பதிவை வெளியிடாமலே அவரது கார் ரேஸிங்க் நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இப்படி ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் நிச்சயமாக அந்தப் பகுதியில் அஜித் குமாரின் ரசிகர்கள் கூட்டம் குவியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித் குமாரின் வீடியோ:
AK sir from Portimao circuit, thanking everyone for the support ❤️ #Ajithkumar https://t.co/HjXaQ5QCLe
— Dinesh (@nobody_offl) October 6, 2026