நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்… நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!
Actor Sivakarthikeyan About Negative Comments | நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அந்த விழாவில் ரசிகர்களிடையே சமூக வலைதள பக்கத்தில் வரும் நெகட்டி விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும், பாடகர் மற்றும் பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார் சிவகார்த்திகேயன். அதன்படி தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் சேயோன். இந்தப் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சேயோன் படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்தியேகன். அந்த விழாவில் அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்:
நம்மைக் குறை கூறுபவர்களும், கேள்வி கேட்பவர்களும், நாம் செய்யும் செயல்களைப் பற்றிப் பேசுபவர்களும் எப்போதும் இருப்பார்கள். அது பரவாயில்லை. அவர்களின் வார்த்தைகளை நாம் சுமந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. யாராவது நம்மைப் புண்படுத்தினாலோ அல்லது மோசமாக நடத்தினாலோ, அவர்களுக்குப் பதிலடி கொடுப்பதில் நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, நமக்குத் துணையாக நின்றவர்கள், நம்மை நம்பியவர்கள் மற்றும் இன்று நாம் இருக்கும் நிலைக்கு வர உதவியவர்கள் மீது கவனம் செலுத்துவோம். தொடர்ந்து முன்னேறுவதும், நமக்கு ஆதரவளித்தவர்களுக்குத் திருப்பிச் செய்வதுமே அதற்கான சிறந்த வழியாகும்.
நாம் என்ன செய்தாலும், சிலர் நம்மைக் குறை கூறத்தான் செய்வார்கள். அவர்கள் பேசட்டும். நாம் புன்னகைத்து, நம் பயணத்தை ரசித்து, தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். ஒரு நதியைப் போல இருங்கள்; அது சரியான பாதையைத் தேடி காத்திருப்பதில்லை, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்கிறது. அது பாயும் இடமெல்லாம் உயிர்ப்பை அளித்து, மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் அமைகிறது என்று தெரிவித்துள்ளார்.
Also Read… தள்ளிப்போகிறதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Sivakarthikeyan about Social Media
– There will always be people who judge us, question us, or have something to say about the things we do. That’s okay. We don’t need to carry their words with us.
– When someone hurts us or treats us badly, let’s not waste our time trying to get even. Instead, let’s focus on the people who stood by us, believed in us, and helped us become who we are today. The best way to respond is to keep growing and give back to those who supported us.
– No matter what we do, some people will criticize us. Let them talk. We can simply smile, enjoy our journey, and keep moving forward, Be like a river it doesn’t wait for the perfect path; it creates its own. And wherever it flows, it brings life and becomes useful to others.
#Seyon— Movie Tamil (@_MovieTamil) October 7, 2026
Also Read… ராட்சசன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? அட இது தெரியாமப்போச்சே!