AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கனடாவில் வசிக்கும் கேரள பெண்ணுக்கு ரூ.30 கோடி லாட்டரி.. சுவாரஸ்ய சம்பவம்!

Kerala Woman Wins CAD 5 Million Lottery | கேரளாவை சேர்ந்த சினேகா என்ற பெண், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அவர் அங்கி லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளார். அதாவது, சுமார் ரூ.30 கோடி லாட்டரியை அவர் வெற்றி பெற்றுள்ளார்.

கனடாவில் வசிக்கும் கேரள பெண்ணுக்கு ரூ.30 கோடி லாட்டரி.. சுவாரஸ்ய சம்பவம்!
லாட்டரி வென்ற சினேகா
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Nov 2026 23:48 PM IST

ஒட்டாவா, நவம்பர் 23 : கனடா (Canada) நாட்டின் எட்மண்டன் நகரில், கேரளாவை (Kerala) சேர்ந்த சினேகா ஜாய் என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வழக்கம் போல தனது ஸ்மார்ட்போனில் உள்ள லாட்டரி செயலியை சோதனை செய்து பார்த்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷடம் காத்திருந்துள்ளது. அதாவது, அவருக்கு சுமார் ரூ.30 கோடி லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. அது அவருக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், கேரள பெண்ணுக்கு கோடிகளில் லாட்டரி விழுந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேரளா பெண்ணுக்கு கனடா லாட்டரியில் விழுந்த பரிசு

கனடாவில் அக்டோபர் 21, 2026 அன்று லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தான் அந்த பெண், தனது மொபைல் போனில் உள்ள லோட்டோ ஸ்பாட் என்ற செயலியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு லாட்டரி விழுந்துள்ளதை கண்டு சினேகா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதாவது, ஒரு நொடியில் அவர் கோடீஸ்வரியானதை நம்ப முடியாமல் நின்றுள்ளார்.

இதையும் படிங்க : டாஸ் மூலம் தேர்வு செய்யப்பட்ட தலைவர்.. அமெரிக்க தேர்தலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது : சினேகா

லாட்டரியில் தனக்கு பரிசு விழுந்தது குறித்து சினேகா மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதாவது, பரிசு விழுந்ததை அறிந்ததும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த நேரத்தில் ஏற்பட்ட உணர்வுகளை அதிர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகிய மூன்று வார்த்தைகளில் விவரிக்கலாம். தான் லாட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தாலும், இவ்வளவு பெரிய தொகை தனக்கு பரிசாக கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 18 நாடுகளில் பரவிய புதிய கொரோனா வகை PJ.2.1 – உலக சுகாதார அமைப்பு கண்காணிப்புப் பட்டியலில் சேர்ப்பு

உலகை சுற்றிப் பார்க்க திட்டம்

தனது வங்கி கணக்கில் கடனா மதிப்புப்படி 5 மில்லியன் டாலர்கள் உள்ளதன் காரணமாக, தனது வீட்டுக் கடனை அடைத்துவிட்டு நிதி சுமையில் இருந்து நிம்மதியாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, மீதமுள்ள பணத்தில் உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்க விரும்புவதாகவும், பரிசுத் தொகையில் குறிப்பிட்ட அளவு பணத்தை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பெண், கனடாவில் வசித்து வரும் நிலையில் அவருக்கு ரூ.30 கோடி பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us