இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாராட்டிய டிரம்ப்.. அமெரிக்க மத்திய வங்கிக்கு கடும் விமர்சனம்!
Trump Hails India's 7 Percentage Economic Growth | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பாராட்டியுள்ளார். அமெரிக்க மத்திய வங்கி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இந்தியாவை பாராட்டியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாஷிங்டன், நவம்பர் 22 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump), அமெரிக்க மத்திய வங்கியை (America Central Bank) விமர்சித்த நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பாராட்டியுள்ளார். அமெரிக்காவில் பண வீக்கம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய வங்கியை விமர்சித்த டிரம்ப், இந்தியாவை பாராட்டியுள்ளார். இந்த நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியுள்ளது என்ன என விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க மத்திய வங்கியை கடுமையாக விரம்சித்த டிரம்ப்
அது தொடர்பாக பேசிய டிரம்ப் கூறியதாவது, அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். நான்கு நாட்கள் ஆசிய பயணத்தை முடித்துக்கொண்டு, அமெரிக்கா திரும்பிய அவர் அந்த மத்திய வங்கியின் நிதிக் கொள்ளைகளைம் கடுமையாக விமர்சனம் செய்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : சர்வதேச ஆண்கள் தினம் இன்று: ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?




இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப்
அமெரிக்க மத்திய வங்கி மிகவும் அரசியல் மயமாக செயல்படுவதாகவும், நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்போதெல்லாம் வட்டி விகிதத்தை உயர்த்தி வளர்ச்சியை சீரழிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வட்டி விகிதத்தை குறைத்தால் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதத்திற்கு பதிலாக 15 முதல் 20 சதவீதம் வரை உயரும். நாட்டின் கடன்களை விரைவாக அடைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இலங்கைக்கு ரூ. 60 லட்சம் பீடி இலைகள் கடத்தல் முயற்சி.. சினிமா பாணியில் நடந்த சேஷிங்.. 2 பேரை தூக்கிய க்யூ பிரிவு போலீஸ்!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிய டிரம்ப்
இந்த சூழலில் தான் இந்தியாவை உதாரணமாக காட்டி டிரம்ப் பேசியுள்ளார். அதாவது, இந்தியாவில் குறைந்த வட்டி இருப்பதன் காரணமாக தான் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிகிறது. உலகின் மற்ற நாடுகளை நிதி ரீதியாக உயர்த்தும் அமெரிக்காவில் வட்டி விகிதம் மிக குறைவாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மிக கடுமையான பண வீக்கம் உள்ள நிலையில், அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்திக்க முக்கிய காரணமாகவும் உள்ளது. இந்த நிலையில் தான், டிரம்ப் தனது நாட்டின் மத்திய வங்கியை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.