வயது 23.. சாதனை உலகளவில்.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜப்பானின் செல்லப்பிள்ளை பூட்டா!
Japanese Red Panda Guinness World Record : ஜப்பான் மிருகக் காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள 23 வயதான பூட்டா என்று அழைக்கப்படும் சிவப்பு பாண்டா உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
உலக கின்னஸ் சாதனை அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 17- ஆம் தேதி) 23 வயதான பூட்டாவை கூண்டில் வாழும் மிகவும் வயதான சிவப்பு பாண்டாவாக அறிவித்தது. இந்த விலங்கை காண்பதற்காக ஜப்பானில் உள்ள சிபா நகர மிருகக்காட்சி சாலைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து செல்கின்றனர். சர்வதேச சாதனை அமைப்பின் பிரதிநிதி ஒருவர் இந்த விருதுக்கான சான்றிதழை மிருகக்காட்சி சாலைக்கு வழங்கிய போது, ஊழியர்கள் பூட்டாவுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சிவப்பு பாண்டாவின் சராசரி ஆயுட்காலம் சுமார் 12 முதல் 17 ஆண்டுகள் ஆகும். இதற்கு முந்தைய சாதனை படைத்த அமெரிக்காவின் ஜூமொன்டாவைச் சேர்ந்த டெய்லர் 21 ஆண்டுகள் மற்றும் 265 நாட்கள் வாழ்ந்திருந்தது.
2003- ஆம் ஆண்டு பிறந்த பூட்டா சிவப்பு பாண்டா
கடந்த 2003- ஆம் ஆண்டு ஜூலை 5- ஆம் தேதி ஷிஜுவோகா நகராட்சி நிஹொண்டைரா மிருகக்காட்சி சாலையில் பூட்டா பிறந்தது. அதன் தந்தை ஃபூஃபூவின் பெயரே பூட்டவுக்கும் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 2004- ஆம் ஆண்டு சிபா மிருகக்காட்சி சாலைக்கு பூட்டா மாற்றப்பட்டது. தற்போது வரை அங்கேயே பூட்டா வசித்து வருகிறது. அந்த உரோமம் நிறைந்த விலங்கு, தனது 2 பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று ஜப்பான் முழுவதும் உள்ள மக்களை கவர்ந்தது. அதன் தனித்துவமான தோரணை மிகவும் பிரபலமடைந்த காரணத்தால் அது ஒரு குளிர்பான விளம்பரத்திலும் இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியா நிபந்தனை? மறுப்பு தெரிவித்த வங்கதேச அரசு.. நடந்தது என்ன!
உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த பூட்டா
கடந்த 2005- ஆம் ஆண்டில் ஜப்பானின் சிபா விலங்கியல் பூங்காவில் வசிக்கும் சிவப்பு பாண்டாக்களில் ஒன்றான ஃ பூட்டா, தனது 2 பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்றபோது, நாடு முழுவதும் உள்ள மக்களை கவர்ந்து இழுத்தது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு, கூண்டில் வாழும் மிக வயதான சிவப்பு பாண்டாவாக ஃபூட்டா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று கின்னஸ் உலக சாதனைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
23 ஆண்டுகள் 135 ஆண்டுகள் வாழும் சிவப்பு பாண்டா
சிபா நகர மிருகக்காட்சி சாலையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு சான்றிதழுக்கு முன்னால் ஃ பூட்டா போஸ் கொடுக்கும் ஒரு அழகான புகைப்படத்தை பதிவிட்டு இருந்தது. அத்துடன், மோசமான வானிலை காரணமாக பொதுமக்களால் பூட்டாவை பார்க்க முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விலங்கு அறிவியல் அருங்காட்சியகத்தில் ஒரு சான்றளிப்பு விழா நடைபெற்றது. அதில், 17- ஆம் தேதி, 23 ஆண்டுகள் மற்றும் 135 நாட்கள் வயதுடைய பூட்டா சிறைபிடிக்கப்பட்ட நிலையில் வாழும் மிக வயதான சிவப்பு பாண்டா என்று கின்னஸ் உலக சாதனைகளால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: அக்டோபரில் 26 டன் கொள்முதல்! சீனா அதிகளவு தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பது ஏன்? இந்தியா எந்த இடத்தில் உள்ளது!