AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“சென்னையில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட ஒலிம்பிக் சிட்டி!”.. செம்மஞ்சேரியில் 124 ஏக்கர் நிலத்தை இறுதி செய்தது தமிழக அரசு!

Olympic City in Tamil Nadu: சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் 124 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான 'ஒலிம்பிக் சிட்டி' அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான மாஸ்டர் பிளான் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை வழங்குவதற்கான நிறுவனத்தைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

“சென்னையில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட ஒலிம்பிக் சிட்டி!”.. செம்மஞ்சேரியில் 124 ஏக்கர் நிலத்தை இறுதி செய்தது தமிழக அரசு!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 18 Nov 2026 11:02 AM IST

சென்னை, நவ.18: சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதிலும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மாநிலம் முழுவதும் மேம்படுத்துவதிலும் தமிழக அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய பிரம்மாண்டமான ‘ஒலிம்பிக் சிட்டி’ (Olympic City) ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில் தற்போது மிக முக்கியக் கட்டமாக, சென்னைக்கு அருகில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் இதற்கென 124 ஏக்கர் நிலப்பரப்பு இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: “நள்ளிரவில் வீடு புகுந்த கொடிய விஷப்பாம்பு!”.. தாயுடன் தூங்கிய 2 பிஞ்சுக் குழந்தைகள் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்..

செம்மஞ்சேரியில் 124 ஏக்கர் நிலப்பரப்பு:

சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் ஒதுக்கப்பட்டுள்ள 124 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் சிட்டி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பொதுப்பணித்துறையின் கட்டடங்கள் மற்றும் கட்டுமானம் பராமரிப்புப் பிரிவின் கீழ், இந்தத் திட்டத்திற்கான விரிவான மாஸ்டர் பிளான், கட்டட வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை வழங்குவதற்கான முன்னணி நிறுவனத்தைத் தேர்வு செய்யும் நடவடிக்கைக் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தகுதியான ஆலோசனை நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி  கோரப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தை தேர்வு செய்யும் முறை:

பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கட்டடக்கலை குழுவில் பதிவு செய்து முன்னணியில் இருக்கக்கூடிய மற்றும் சர்வதேச தரத்திலான வடிவமைப்புப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் இந்த ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அந்தப் புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனம்தான் 124 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள ஒலிம்பிக் சிட்டியின் முழுமையான கட்டமைப்பை வடிவமைத்துத் தரும். அந்த நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படியே கட்டுமானப் பணிகள் மற்றும் அனைத்து நவீன விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிக்க: எச்சரித்தும் கேட்காத மனைவி.. கணவனே அரங்கேற்றிய கொடூர இரட்டைக்கொலை.. விருதுநகரில் பயங்கரம்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒலிம்பிக் மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், செம்மஞ்சேரியில் அமையவுள்ள இந்த 124 ஏக்கர் ஒலிம்பிக் சிட்டி திட்டம் மாநிலத்தின் விளையாட்டு வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த நவீன விளையாட்டு நகரில் அனைத்து வகையான விளையாட்டுகளுக்கான பயிற்சிக் கூடங்கள், தங்குமிடங்கள் மற்றும் அதிநவீன வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் வரும் காலங்களில் சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பெருமளவில் பதக்கங்களை வெல்லத் தேவையான உள்கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us