AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிவிஎஸ் குழுமத்தில் தீவிரமடையும் சொத்து பிரச்னை – வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய மகள் – என்ன நடந்தது?

TVS Family Property Dispute : தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழில் நிறுவனமான டிவிஎஸ் குழுமத்தின் சொத்துகளை பிரிப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மகள் தனது தந்தைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிஎஸ் குழுமத்தில் தீவிரமடையும் சொத்து பிரச்னை –  வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய மகள்  – என்ன நடந்தது?
வேணு ஸ்ரீநிவாசன் - லக்ஷ்மி வேணு
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Nov 2026 10:12 AM IST

சென்னை, நவம்பர் 18 : டிவிஎஸ் (TVS) குழுமத்தின் சொத்துகளை தனது சகோதரர் பெயரில் மாற்றுவதற்கு தந்தை வேணு சீனிவாசன் முயற்சிப்பதாகவும், தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து வழங்க வேண்டும் எனவும் அவரது மகள் லட்சுமி வேணு வழக்கறிஞர் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் மிகப்பெரிய அளவிலான வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சொத்து தகராறு பேசுபொருளாகியுள்ளது.

டிவிஎஸ் குழுமத்தில் தீவிரமடையும் சொத்து பிரச்னை

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழில் நிறுவனமான டிவிஎஸ் குழுமத்தின் சொத்துகளை பிரிப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மகன் மற்றும் மகள் இடையே சொத்துகளை பிரிப்பது தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், வேணு சீனிவாசனின் மகள் லட்சுமி வேணு, குடும்பச் சொத்துகளில் தனக்குரிய பங்கை முறையாகப் பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனது தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் – அமைச்சர் அருண்ராஜ் பகிர்ந்த தகவல்

அதில், குடும்பத்தின் சொத்துகளை நியாயமான முறையில் சட்டப்படியும் பிரித்து வழங்க வேண்டும் என்றும், குடும்பச் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை வேணு சீனிவாசன் முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக லட்சுமி வேணு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், கூட்டுக் குடும்பச் சொத்துகளில் மகள்களுக்கும் சம உரிமை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்து வாரிசுரிமை சட்டத்தின் 6வது பிரிவின்படி, குடும்பச் சொத்துகளில் தனக்குரிய பங்கைப் பெறுவதற்கும், சொத்துகளைப் பிரிக்கக் கோருவதற்கும் சட்டப்பூர்வ உரிமை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், குடும்பச் சொத்துகளில் தனக்குரிய பங்கை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க : திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்.. முழு விவரம்!!

அதன்படி, டிவிஎஸ் ஹோல்டிங்கஸ், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, டிவிஎஸ் கிரெடிட் சர்வீஸர் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ள குடும்பப் பங்குகளையும் பிரிக்க வேண்டும் என லட்சுமி வேணு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குடும்பத்தின் சொத்துகளில் தனக்குரிய பங்கு மறுக்கப்படுவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தனது சகோதரருக்கு சாதகமாகச் சொத்துகள் மாற்றி எழுதப்படுவதாவும் இதனால் தனது சட்டப்பூர்வ உரிமைகள் பறிக்கபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை சேர்க்காமல் குடும்ப உறுப்பினர்கள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளாலோ அல்லது நிறுவனங்கள் தொடர்பான ஒப்பந்தங்களாலோ தனது சட்டப்பூர்வ சொத்துரிமையைப் பறிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us