AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

13 நாட்களில் ரூ.9,360 வரை குறைந்த தங்கம் விலை… இன்றும் அதிரடியாக விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நவம்பர் 17 நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 760க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 நாட்களில் ரூ.9,360 வரை குறைந்த தங்கம் விலை… இன்றும் அதிரடியாக விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
கோப்பு புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Nov 2026 10:34 AM IST

தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 2025 ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவு அதிபர் டிரம்புக்கு எதிராக அமைந்த பின் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன்பிறகு கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நவம்பர் 17 நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 760க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 18, 2026 இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை இன்று கிராமுக்கு 255 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12, 215 ரூபாய்க்கும், சவரனுக்கு மேலும் 2040 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 97, 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 185 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளி 1,85,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 13 நாட்களில் தங்கம் சவரனுக்கு 9,360 ரூபாய் சரிந்துள்ளது. குறிப்பாக இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,040 குறைந்து, நடப்பாண்டின் மிகக்குறைந்த விலையாக ரூ.97,720க்கு விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us