11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சென்ற தங்கம்.. டிசம்பர் மாதம் வரை இப்படி தான் இருக்கும்?
2026 Gold Rate Plunge | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை தற்போது ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கம் விலை (Gold Price) கடும் உச்சத்தில் இருந்தது. ஆனால், தற்போது தங்கம் விலை கடும் சரிவில் உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டபோது, ஆண்டின் இறுதியில் ஒரு கிராம் தங்கள் ரூ.20,000-க்கு மேல் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது, தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கு என்ற அளவில் விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தான், டிசம்பர் மாதம் முடியும் வரை தங்கம் விலை இத்தகைய சரிவில் தான் இருக்குமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சென்ற தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவில் உள்ளது. அதன் காரணமாக, இந்தியாவிலும் தங்கம் விலை குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் தான், சுமார் 11 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, 11 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது. ஜனவரி மாதம் ரூ.1.34 லட்சம் என்ற உச்சத்தை தொட்ட தங்கம் இன்று (நவம்பர் 17, 2026) ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.




இதையும் படிங்க : ரூ.52 லட்சம் சம்பள வேலையை விட்டுவிட்டு மோமோஸ் தொழில் தொடங்கிய நபர்.. தற்போது ஆண்டுக்கு ரூ.5 கோடி!
தங்கம் விலை சரிய முக்கிய காரணமாக இருக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் தற்போது மிக கடுமையான பணவீக்கம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank) வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்ப்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.
இதையும் படிங்க : ஆன்லைனில் புதிய ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?.. இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ்!
அமெரிக்காவின் பத்திரங்களின் தொகை உயர்ந்துள்ளது
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் அமெரிக்காவின் 10 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டு கால அரசு பத்திரங்களின் தொகை கனிசமாக உயர்ந்துள்ளது. எனவே தான் வட்டி தராரத முதலீடான தங்கத்தின் மீது உலக முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ள நிலையில், அவர்கள் தங்கத்து பதிலாக பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
டிசம்பர் மாதன் அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும் முக்கிய முடிவை பொருத்தே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.