AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆன்லைனில் புதிய ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?.. இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ்!

How to Apply for New Aadhaar Card in India | இந்தியர்களுக்கு மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைனில் புதிய ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?.. இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Nov 2026 10:00 AM IST

இந்தியாவில் உள்ள குடிம்மக்கள் ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) உள்ளிட்ட சில ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதிலும் மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு. ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், பணியில் சேறுவது, வங்கியில் கடன் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டியது கட்டாயமாகவும் உள்ளது. இத்தகைய மிக முக்கியமான ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

ஆதார் கார்டில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபை எண் மாற்றம் உள்ளிட்டவற்றை இணையதளம் மூலம் மிக சுலபமாக மேற்கொள்ளலாம். ஆனால், ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் இ சேவை மையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.

ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் முறை

1. அதற்கு ஆதார் இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.
2. அதில் கேட்கப்பட்டு இருக்கும் விவரங்களை தெளிவாக நிரப்ப வேண்டும்.
3. பிறகு அதற்கு கோரப்படும் தேவையாண ஆவங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
4. அப்போது ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் நபரின் கைரேகை, கண் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும்.
5. அதன் பிறகு ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள முறையின் படி, ஆதார் இ சேவை மையங்களில் புதிய ஆதார் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கப்படும்.

இதையும் படிங்க : Gold Price : திடீரென சரிந்த தங்கம் விலை.. இதற்கும் அமெரிக்கா தான் காரணம்.. என்ன நடக்குது?

விண்ணப்பத்திற்கு பிறகு என்ன நடக்கும்?

ஆதார் விண்ணப்பத்திற்கு பிறகு 14 இலக்க எண்கள் (Enrollment Number) உடன் கூடிய ரசீதி ஒன்று வழங்கப்படும். அந்த எண்ணை பயன்படுத்தி உங்களது ஆதார் விண்ணப்பத்தின் நிலை என்னவாக உள்ளது என்பது குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். ஆதார் விண்ணப்பம் செய்த 15 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள்ளாக உங்களது வீடு தேடி ஆதார் கார்டு வந்துவிடும்.

இதையும் படிங்க : உச்சத்தில் தங்கம் விலை.. இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் எப்படி தங்கம் வாங்குகின்றனர்?

ஆதார் கார்டு பதிவு செய்யும்போது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், ஆதார் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துக்கொள்ள இந்த இரண்டு தகவ்லகளும் வழங்கப்படுவது மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us