AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உச்சத்தில் தங்கம் விலை.. இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் எப்படி தங்கம் வாங்குகின்றனர்?

Gold Buying In This Diwali | தங்கம் விலை தற்போது உச்சத்தில் உள்ளது. இதனால், சாமானிய மக்களால் தங்கம் வாங்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், 2026 தீபாவளிக்கு பொதுமக்கள் எப்படி தங்கம் வாங்குகின்றனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உச்சத்தில் தங்கம் விலை.. இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் எப்படி தங்கம் வாங்குகின்றனர்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Nov 2026 14:26 PM IST

இந்தியர்களையும் தங்கத்தையும் (Gold) பிரிக்கவே முடியாது. இந்தியர்களின் வாழ்க்கையோடு இணைந்த முக்கிய உலோகமாக தங்கம் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு (Tamil Nadu) இந்த பட்டியலில் முதல் இடம் பிடிக்கும். அதாவது, இந்தியாவில் (India) உள்ள பெருமளவு தங்கம் தமிழ்நாட்டில் தான் உள்ளதாம். அந்த அவளவுக்கு தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் தங்கத்தில் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் இந்தியர்கள் எப்படி தங்கம் வாங்குகின்றனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை : இந்த தீபாவளி எப்படி இருக்கும்?

இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது அளவில்லாத பற்று உள்ளது. அதனை சிறந்த முதலீடாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் மற்றும் பண்டிகைகளின்போது சிறிதளவாவது தங்கத்தை வாங்கும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், இந்த ஆண்டு பொதுமக்கள் தங்கம் வாங்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : செக்கில் ஏன் “Only” என குறிப்பிடப்படுகிறது?.. அதற்கான உண்மையான அர்த்தம் இதுதான்!

லைட் வெயிட் தங்க நகைகளை வாங்கும் பொதுமக்கள்

2020 ஆம் ஆண்டு தங்கம் விலை குறைவாக இருந்தது. ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.4,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பணவீக்கம், விலைவாசி உள்ளிட்ட சிக்கல்களில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு தங்கம் வாங்குவது சவாலாக உள்ளது. இருப்பினும் தீபாவளிக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது.

இதையும் படிங்க : மாருதி சொன்ன குட்நியூஸ்.. சக்திவாய்ந்த எஸ்யூவிக்கு நல்ல தள்ளுபடி.. ஜிம்னி சிறப்புகள் என்ன?

கிராம் கணக்கில் தங்கத்தை வாங்கும் மக்கள்

இந்த நிலையில் தான் பொதுமக்கள் லைட் வெயிட் தங்க நகைகளை (Light Weight Gold Jewelleries) வாங்க முடிவு செய்துள்ளனர். முன்பு சவரன் கணக்கில் தங்கத்தை வாங்கிய பொதுமக்கள் தற்போது கிராம் கணக்கில் நகைகளை வாங்குகின்றனர். குறைவான எடை ஆனால் பார்வையான தோற்றம் கொண்ட நகைகளையே பொதுமக்கள் பெருமளவு வாங்குகின்றனர். தங்கம் விலையை கருத்தில் கொண்டு நகைக் கடைகளும் குறைந்த எடை கொண்ட தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us