கேரளாவில் குங்கும பூ வளர்த்து அசத்தும் நபர்.. ஒரு கிராம் ரூ.650!
Kerala AI Saffron Cultivation | சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அந்த வகையில், கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு அம்சம் மூலம் விவசாயம் செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.
செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உலக அளவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். இவ்வாறு மனிதர்களின் வேலைக்கு செயற்கை நுண்ணறிவு அம்சம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள நிலையில், சில அதே செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் தங்களது வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளனர். அந்த வகையில், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் குங்குமப்பூ உற்பத்தி செய்து விற்பனை செய்யும் கேரள நபரின் சுவாரஸ்ய கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சொந்தமான தொழில் தொடங்க நினைத்த ராணுவ துறை பணியாளர்
ஜேம்ஸ் கப்பானி என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ராணுவ துறையில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். தனது சொந்த ஊரான திருச்சூரில் ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்துள்ளது. இதற்கிடையே தான் அவர், தொழில்முறை பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். அவர் நல்ல குங்கும பூ சீசனான நவம்பரில் அங்கு சென்ற நிலையில், பூத்துக் குலுங்கிய குங்கும பூக்களை கண்டு வியப்புக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப் மூலமே PF பேலன்ஸ் தெரிந்துக்கொள்ளலாம்.. வந்தது அட்டகாசமான அம்சம்!




கேரளாவில் குங்கும பூ வளர்த்து அசத்தல்
இந்த நிலையில் தான், கேரளாவில் குங்கும பூ வளர்க்க முடியுமா என்ற யோசனையில் இறங்கியுள்ளார். தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் காய்கறி ஏற்றுமதி செய்து வந்துள்ளார். ஆனால், உற்பத்தி குறைவாக இருந்ததன் காரணமாக அவர் வெளி மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் வேறு தொழில் செய்ய வேண்டும் என நினைத்த அவர் குங்கும பூ உற்பத்தி செய்யும் முடிவை எடுத்தார்.
இதையும் படிங்க : தீபாவளி.. பட்டாசு விபத்துக்களை இன்சூரன்ஸில் கவர் செய்ய முடியுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!
அதற்காக முதற்கட்டமாக காஷ்மீரில் இருந்து குங்கும பூ கிழங்குகளை வாங்கி வந்துள்ளார். பிறகு அதனை வளர்ப்பது எப்படி என்பதை தெரிந்துக்கொண்டு, வீட்டுக்குள்ளேயே குங்கும பூ வளர்வதற்கான சூழலை உருவாக்கினார். அதற்காக அவர் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் சிறிதளவு குங்கும பூ கிழங்குகளை வாங்கி உற்பத்தி செய்ய தொடங்கிய அவர், அதன் பிறகு குழங்குகளை அதிகரித்துள்ளார். தற்போது சுமார் 1,000 கிராம் வரை அவருக்கு குங்கும பூ கிடைக்கிறது.
ஒரு கிராம் குங்கும பூ ரூ.650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குங்கும பூ மட்டுமன்றி, அந்த பூவின் இதழ்கள் பேயி ஆயில், சோப் ஆகியவை செய்ய பயன்படுவதால் அதன் மூலமும் வருமானம் பெற்று வருகிறார்.