தீபாவளி.. பட்டாசு விபத்துக்களை இன்சூரன்ஸில் கவர் செய்ய முடியுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!
Firecracker Accident Insurance | இந்தியாவில் விரைவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்டட்டங்களுக்கு தயாராவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியாமக உள்ளது. இந்த நிலையில், பட்டாசு வெடி விபத்துக்களை கவர் செய்யும் இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது.
இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகவும், கோடிக்கணக்கான மக்களால் கோலகலமாக கொண்டாடப்படும் நிகழ்வாக தீபாவளி (Diwali) உள்ளது. தீபாவளி பண்டிகை என்பது பட்டாசு வெடிப்பது, புத்தாடை அணிவது மட்டுமன்றி, அதில் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளதோ அதே அளவுக்கு ஆபத்துக்களும் உள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டாசுக்கள் மூலம் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த விபத்துக்கள் உங்களுக்கு காயத்தை ஏற்படுத்தி, சிகிச்சை வரை கொண்டுச்செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான், பட்டாசு விபத்துகளுக்கு இன்சூரன்ஸில் (Insurance) கவர் கிடைக்குமா என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
பட்டாசு வெடி விபத்துகளுக்கு இன்சூரன்ஸ் கவர் உண்டா?
பெரும்பாலான நபர்கள் பட்டாசு தொடர்பான வெடி விபத்து சம்பவங்களுக்கு இன்சூரன்ஸில் க்ளெய்ம் செய்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். ஆனால், அது உண்மை இல்லை. நீங்கள் எந்த வகையான இன்சூரன்ஸ் பெற்றுள்ளீர்கள் என்பதை பொருத்துதான் உங்களுக்கு எந்த எந்த சூழல்களில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் விபத்து ஆகியவற்றை பொருத்தே உங்களுக்கு இன்சூரன்ஸ் பலன்கள் கிடைக்கும்.
இதையும் படிங்க : பராமரிப்பு கம்மி.. மைலேஜ் அதிகம்.. ரூ.6 லட்சம் பட்ஜெட்டுக்குள் சிறந்த 5 கார்கள் இவைதான்




குறுகிய கால பட்டாசு இன்சூரன்ஸ் திட்டங்கள்
இதற்காக தான் குறுகிய கால பட்டாசு இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. இதற்காக வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் விபத்து காப்பீட்டு திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. பட்டாசு விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஹோம் இன்சூரன்ஸ் மூலமும் பலன்களை பெறலாம். ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு வகையான பாதுகாப்பு மற்றும் சிறப்பு அம்சங்களை வழங்கும்.
இதையும் படிங்க : தீபாவளிக்கு கார் வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் குறைந்த வட்டி?
ஒருவேளை பட்டாசு மூலம் விபத்து ஏற்பட்டால், முதல் உதவி சிகிக்கை பெற்ற பிறகு அது குறித்து இன்சூரர் இடம் தெரிவிக்க வேண்டும். விபத்துகளுக்கு மருத்துவ காப்பீடு பெற பயனர்கள் க்ளெய்ம் ஃபார்ம், பாலிசி விவரங்கள், மருத்துவமனை அனுமதி கடிதம், டிஸ்சார்ஜ் பேப்பர்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.