வெறும் 2 கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் தான் விற்பனை.. மாதம் ரூ.6 லட்சம் வருமானம்.. அசத்தும் அகமதாபாத் தம்பதி!
Ahmedabad Couple's Cool Drink Business | அகமதாபாத்தை சேர்ந்த தம்பதி இருவர் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக சிறியதாக ஒரு கூல் ட்ரிங்க்ஸ் தொழிலை தொடங்கி அதன் மூலம் மாதம் ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்த வகையில் தொழில் லாபம் தரவில்லை என்றாலோ, சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டாலோ பலரும் தொழிலை கைவிட்டுவிடுவர். ஆனால், அகமதாபத்தை (Ahmadabad) சேர்ந்த தம்பதி இருவர் வெறும் இரண்டே குளிர்பானங்கள் (Cool Drinks) மூலம் தொழில் தொடங்கி தற்போது மாதம் ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர். யார் அவர்கள், அவர்களின் தொழில் சாதித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தி கோகோ ஸ்டேஷன் தொழிலை தொடங்கி சாதித்த தம்பதி
மென்பொருள் இன்ஜினியரான தர்ஷன் ஜின்சுவாடியா மற்றும் எம்பிஏ பட்டம் பெற்ற அவரது மனைவி சுருதி ஜின்சுவாடியா ஆகிய இருவரும் இணைந்து 2025 ஆம் ஆண்டு தி கோகோ ஸ்டேஷ்ன் (The Coco Station) என்று தங்களது சிறிய தொழிலை தொடங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் செய்த முதலீடு வெறும் ரூ.3,000 மட்டும் தான். இவர்கள் கோல்ட் கோகோ மற்றும் கோல்ட் காஃபி ஆகியவற்றை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : வீட்டுக் கடன், வாகன கடன் EMI செலுத்துபவர்களுக்கு சிக்கல்.. ஆர்பிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு!




18 பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது
இவர்களால் தொழிலின் தொடக்கத்தில் வெறும் 18 பாட்டில்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. அதன்மூலம் தினமும் ரூ.1,120 வருமானம் பெற்று வந்துள்ளனர். ஆனால், நாளடைவில் இவர்களின் தொழில் மக்கள் மத்தியில் சென்று சேர தொடங்கியது. அதாவது, 18 பாட்டில்கள் சுமார் 150 பாட்டில்களாக அதிகரித்த நிலையில், அவர்களின் வருமானமும் மாதத்திற்கு ரூ.6 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : தீபாவளி ஆஃபர்ஸ்.. நெக்ஸான் முதல் கைலாக் வரை.. இந்த 5 எஸ்யூவி கார்களுக்கு என்ன தள்ளுபடி!
ஆரம்பத்தில் இருவரும் பணியாற்றிக்கொண்டே பகுதி நேரமாக மட்டுமே தொழிலை செய்து வந்துள்ளனர். அதன் பிறகு, தர்ஷனின் மனைவி வேலையை விட்டுவிட்டு தொழிலில் முழு கவனத்தை செலுத்த தொடங்கினார். இவ்வாறு இருவரும் இணைந்து தொழிலை படிப்படியாக முன்னேற்றி தற்போது மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளனர்.
தர்ஷன் தற்போதும் கூட வேலை செய்துக்கொண்டே மனைவிக்கு தொழிலில் உதவி செய்து வருகிறார். கடின உழைப்பு இருந்தால் சிறிய துரும்பை கூட பெரியதாக மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த தம்பதிகள் மாறியுள்ளனர்.