AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

November Month Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் 2026 நவம்பர் மாதம் முதல் என்ன என்ன முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Oct 2026 12:11 PM IST

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில், இன்னும் ஒருசில நாட்களில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அப்போது சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், நவம்பர் மாதம் முதல் என்ன என்ன மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நவம்பர் முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்

நவம்பர் மாதம் முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். அதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், நவம்பர் மாத தொடக்கத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : Gold Price : தொடர் உயர்வுக்கு மத்தியில் டிவிஸ்ட் வைத்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?

வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு

தணிக்கை உள்ளிட்ட கணக்குகளை கொண்ட குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த வரி செலுத்துவோருக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 2026- 2027 மதிப்பீடு ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய அக்டோபர் 31, 2026-ல் இருந்து நவம்பர் 21, 2026 கடைசி தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிஎம் கிசான் 24வது தவணை.. தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்!

டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயர்வு

மதுபானங்களின் விற்பனையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதன் விளைவாக இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், பீர், ஒயின், பிற மாநில மதுபானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மதுபானங்களின் விலைகளும் நவம்பர் 01, 2026 முதல் ரூ.10 வரை விலை உயர்த்தப்பட உள்ளன.

எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 கடைகளிலும் கட்டணம் உயர்கிறது

இந்த கட்டண உயர்வு காரணமாக டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் மட்டுமன்றி, எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களின் விலைகளும் உயர்த்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us