தீ விபத்தில் இருந்து உங்கள் வீட்டை பாதுகாக்க உதவும் “Home Insurance”.. முழு விவரம் இதோ!
Secure Your Home With Home Insurance | ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு போல வீட்டிற்கு ஹோம் இன்சூரன்ஸ் உள்ளது. இந்த ஹோம் இன்சூரன்ஸ் எடுக்கும் பட்சத்தில் வீடு விபத்தில் சிக்கினால் வீடு மற்றும் வீட்டிற்குள் இருக்கும் பொருட்களுக்கு இழப்பீடு கிடைக்கும்.
இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான். பண்டிகைக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பில் இருந்தே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க தொடங்கிவிடுவர். இவ்வாறு பட்டாசு வெடிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதில் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்களது வீட்டை விபத்துகளில் இருந்து பாதுகாக்க ஹோம் இன்சூரன்ஸ் (Home Insurance) மிகவும் அவசியமாக உள்ளது.
இந்த நிலையில், வீட்டை பாதுகாக்க உதவும் ஹோம் இன்சூரன்ஸ் என்றால் என்ன, அதனை எப்படி பெறுவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹோம் இன்சூரன்ஸ் பெறுவதில் என்ன நன்மைகள்?
ஹோம் இன்சூரன்ஸ் பெறுவதன் மூலம் வீட்டின் சுவர், ரூஃப், தரை ஆகியவற்றில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும், சேதம் ஏற்பட்டாலும் அதற்கான இழப்பீடு கிடைக்கும். அதுமட்டுமன்றி, வீட்டின் உள்ளே வைக்கப்பட்டு இருக்கும் பிரிட்ஜ், ஏசி, டிவி உள்ளிட்ட பொருட்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் மூலம் கவரேஜ் கிடைக்கும்.




இதையும் படிங்க : தீபாவளி பண்டிகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்த மத்திய அரசு!
உங்கள் வீட்டுக்கு எவ்வளவு காப்பீட்டு தொகை தேவை
அதற்கு உங்களது வீடு மொத்தம் எத்தனை சதுர அடி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். பிறகு உங்களது வீட்டின் ஒரு சதுர அடியை சீரமைக்க எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை மதிப்பீடு செய்யுங்கள். அதன் பிறகு வீட்டின் மொத்த சதுர அடிகளுடன் அந்த அந்த தொகையை கணக்கிட்டு பார்த்தால் உங்களுக்கு ஒரு தொகை வரும். அதனுடன், சீரமைக்க தேவையான பொருட்களின் மதிப்பு ஆகியவற்றை சேர்த்து தொகையை இறுதி செய்வது போதுமானதாக இருக்கும்.
இதையும் படிங்க : பிஎம் கிசான் 24வது தவணை.. தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு வந்த குட் நியூஸ்!
தீ விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும்?
இந்த இன்சூரன்ஸ் மூலம் தீபாவளி பண்டிகை உள்ளிட்ட நாட்களில் வீட்டில் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு வழங்கப்படும். இதேபோல மின்சார பழுது உள்ளிட்ட காரணங்களால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டாலும் இந்த இன்சூரன்ஸ் மூலம் அதற்கான இழப்பீடை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே உங்களது கனவு இல்லத்தை பாதுகாக்க இந்த இன்சூரன்ஸ் எடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.