AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

100% எத்தனால் எரிபொருளுக்கு மத்திய அரசு அனுமதி – உங்கள் காரில் பயன்படுத்தலாமா?

E100 Ethanol Fuel Explained : கிட்டத்தட்ட முழுமையாக எத்தனால் கொண்ட E100 எரிபொருளை, ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் வாகனங்களுக்கான எரிபொருளாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், முழுமையாக எத்தனாலில் இயங்கும் கார்கள் இந்தியச் சந்தைக்கு வருவதற்கான வழி திறந்துள்ளது.

100% எத்தனால் எரிபொருளுக்கு மத்திய அரசு அனுமதி – உங்கள் காரில் பயன்படுத்தலாமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Oct 2026 19:07 PM IST

கிட்டத்தட்ட முழுமையாக எத்தனால் கொண்ட E100 எரிபொருளை, ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் வாகனங்களுக்கான எரிபொருளாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (The Ministry of Road Transport and Highways) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், முழுமையாக எத்தனாலில் இயங்கும் கார்கள் இந்தியச் சந்தைக்கு வருவதற்கான வழி உருவாகியுள்ளது. இதற்கான அறிக்கையை அமைச்சகம் 2026 அக்டோபர் 23 ஆம் தேதி வெளியிட்டது.

இந்த நிலையில் அரசிதழில் அக்டோபர் 27, 2026 இன்று வெளியிடப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இல் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தின்படி, வாகனப் புகை உமிழ்வுத் தரநிலைகள் மற்றும் பரிசோதனை விதிகளில், ஏற்கெனவே உள்ள E85-உடன் E100-உம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ரூ.250-ல் தொழில் தொடங்கி சாதித்த கேரள தம்பதி.. ரூ.80-90 லட்சம் ஆண்டு வருமானம்!

E100 என்றால் என்ன?

E100 என்பது கிட்டத்தட்ட முழுமையாக எத்தனால் கொண்ட எரிபொருள். எத்தனால் என்பது, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் பொருள்களிலிருந்து பொதுவாகத் தயாரிக்கப்படும் ஆல்கஹால் அடிப்படையிலான எரிபொருள். அதன் தரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பொறுத்து, E100 எரிபொருளில் சிறிதளவு தண்ணீரும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

E20க்கும் E100க்கும் என்ன வித்தியாசம்?

தற்போது நாடு முழுவதும் விற்கப்படும் E20 பெட்ரோலில், 20% எத்தனாலும் 80% பெட்ரோலும் வழங்கப்படுகின்றன. ஆனால் E100 என்பது கிட்டத்தட்ட முழுவதும் எத்தனால் எரிபொருள் கொண்டது.

உங்கள் பெட்ரோல் காரில் E100 பயன்படுத்தலாமா?

முடியாது. E85, E100 எரிபொருள்களை, அதிக எத்தனால் எரிபொருளில் இயங்கும் வகையில் தயாரிப்பு நிறுவனங்களே வடிவமைத்த வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனப் புதிய விதிகள் தெளிவாகக் கூறுகின்றன. இத்தகைய வாகனங்களே ‘ஃப்ளெக்ஸ் ஃப்யூயல்’ வாகனங்கள் எனப்படுகின்றன. வெவ்வேறு அளவு எத்தனால் கலவைகளைக் கையாளும் வகையில், இவற்றின் எரிபொருள் அமைப்பு, எஞ்சின் பாகங்கள், மின்னணுக் கட்டுப்பாடுகள் ஆகியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதையும் படிக்க : Car Loan வாங்க போறீங்களா?.. இவற்றை தெரிந்துக்கொண்டால் பல லட்சம் மிச்சம்.. முழு விவரம்!

சாதாரணப் பெட்ரோல் காரில் E100 நிரப்பினால், எரிபொருள் அமைப்பின் பாகங்கள் சேதமடைவதுடன், எஞ்சின் செயல்திறனும் பாதிக்கப்படலாம். E20-க்குச் சான்று பெற்ற வாகனங்களும், தயாரிப்பு நிறுவனம் அனுமதித்துள்ள எரிபொருள்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

Follow Us