AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Car Loan வாங்க போறீங்களா?.. இவற்றை தெரிந்துக்கொண்டால் பல லட்சம் மிச்சம்.. முழு விவரம்!

Tips To Know Before Buying Car Loan | தற்போதைய காலக்கட்டத்தில் கார் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், பலரும் கார் லோன் பெற்று கடன் வாங்குகின்றனர். எனவே கார் லோன் வாங்குவதற்கு முன்னதாக கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Car Loan வாங்க போறீங்களா?.. இவற்றை தெரிந்துக்கொண்டால் பல லட்சம் மிச்சம்.. முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Oct 2026 13:30 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்றாக கார் மாறிவிட்டது. இதன் காரணமாக ஒரு குடும்பத்தில் ஒரு காராவது உள்ளது. இவ்வாறு கார் வாங்க வேண்டும் என பலரும் பணத்தை சேமிப்பது, மாத தவணை (EMI – Every Month Installment) மூலம் கார் வாங்குவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கார் வாங்க லோன் (Car Loan) எடுப்பதற்கு முன்னதாக தெரிந்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

பெரும்பாலான நபர்கள் கார் லோன் வாங்கும்போது காரை வாங்க வேண்டும் என்றால் அதற்கான தொகையை மாதம் மாதம் மாத தவணையாக செலுத்த வேண்டும் அவ்வளவு தான் என நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி அல்ல. கார் லோன் மூலம் கார் வாங்கும்போது செயலாக்க கட்டணம், ஆவண கட்டணங்கள் மற்றும் மறைமுக வரிகள், கட்டணங்கள் ஆகியவற்றை உள்ளன என்பது குறித்து யோசிக்காமல் உள்ளனர்.

இதையும் படிங்க : Gold Price : 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!

வட்டி விகிதத்தில் கவனிக்க வேண்டியவை

கார் வாங்கும்போது அந்த கடனுக்கான வட்டி நிலையானதா அல்லது மாறுபடும் தன்மை கொண்டதா என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். காரணம், நிலையான வட்டியில் வட்டி விகிதம் மாறாது. ஆனால், மாறுபடும் வட்டி கொண்ட கடனில் வட்டி மாறிக்கொண்டே இருக்கும். அதாவது, ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் கடனுக்கான வட்டி விகிதம் குறையும். இதுவே ரெபோ வட்டி விகிதம் உயர்ந்தால் கடனுக்கான வட்டி விகிதமும் உயரும் என்பதுதான்.

இதையும் படிங்க : 53% சரிவை சந்தித்த வெள்ளி.. அதளபாதாளத்திற்கு சென்றது ஏன்?.. முக்கிய காரணிகள்!

Foreclosure கட்டணம் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்

கடன் காலம் முடிவதற்குள்ளாக கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றால் Foreclosure என்ற ஆப்ஷனும் உள்ளது. இதற்கு சில வங்கிகள் கட்டணம் விதிக்கும். எனவே, நீங்கள் கடன் வாங்கும் வங்கியில் அதற்கு எவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

Follow Us