Gold Price : 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்!
Gold and Silver Price In Chennai Today | சென்னையில் இன்று 4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. ஆனால், வெள்ளி விலையோ சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 24 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 24, 2026) விலை உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை (Silver Price) கிராமுக்கு ரூ.5 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் சரிவுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை
சமீப காலமாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. வெள்ளியும் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிலவிய புவிசார் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்களின் மொத்த கவனமும் தங்கம் மற்றும் வெள்ளி மீது இருந்தது. இதன் காரணமாக தங்கம், வெள்ளி தொடர் விலை உயர்வை சந்தித்தது.
இதையும் படிங்க : PF பேலன்ஸ் செக் பண்ண ஒரே ஒரு SMS போதும்.. எப்படி தெரியுமா?
அதன் பிறகு ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கச்சா எண்ணெய் கடும் விலை உயர்வை சந்தித்தது. அதனை தொடர்ந்து உலக மத்திய வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்தின. அதன் காரணமாக தற்போது முதலீட்டாளர்களின் கவனம் தங்கம், வெள்ளி மீது இருந்து திசை திரும்பியுள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,070-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,258-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,064-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 சரிந்து ஒரு கிராம் ரூ.220-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 சரிந்து ஒரு கிலோ ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Bank Holiday : நவம்பர் மாதம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!
அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மேலும் விலை சரிவை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.