PF பேலன்ஸ் செக் பண்ண ஒரே ஒரு SMS போதும்.. எப்படி தெரியுமா?
Use SMS Method To Check PF Balance | பிஎஃப் பேலன்ஸ் செக் செய்ய பலரும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அப்படி இணையதளம் செயல்பாட்டில் இல்லை என்றால் நீங்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிந்துக்கொள்ளலாம். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ஒரு அட்டகாசமான அம்சமாக உள்ளது தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்படும் நிலையில், அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். அத்தகைய அட்டகாசமான அம்சமாக இபிஎஃப்ஓ உள்ள நிலையில், பிஎஃப் (PF – Provident Fund) இருப்பை சோதனை செய்ய இணையதளம் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஃப் இருப்பு சோதனை – இணையதளம் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்யலா?
நீங்கள் பிஎஃப் இருப்பு சோதனை செய்யும்போது இணையதளம் வேலை செய்யவில்லை என்றால் கவலையே வேண்டாம். காரணம், எஸ்எம்எஸ் மூலம் நீங்கள் மிக சுலபமாக உங்களது பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : யுபிஐ-ல் அதிக பணம் வந்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புமா?.. இந்த விதிகளை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!




எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் செக் செய்வது எப்படி?
- அதற்கு முதலில் நீங்கள் உங்களது UAN (Universal Account Number) ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- அதுமட்டுமன்றி யுஏஎன் எண் ஆதார், பான் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
இதையும் படிங்க : Gold Price : தீபாவளிக்கு இப்போதே தங்கம் வாங்கலாமா, காத்திருக்கலாமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?
நெட்வொர்க் வசதி கூட தேவையில்லை
மேலே குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் அந்த எண்ணுக்கு டைப் செய்து மெசேஜ் அனுப்பும் பட்சத்தில் உங்களுக்கு பதில் குறுஞ்செய்தியில் உங்களது வங்கி கணக்கு இருப்பு குறித்த தகவல்கள் வந்து சேர்ந்துவிடும். இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு இணைய வசதி கூட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.