AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உஜ்வாலா திட்டத்தில் முக்கிய மாற்றம்.. இனி 9 அல்ல, 4 போதும்.. என்ன தெரியுமா?

Ujjwala Scheme LPG Subsidy Changes | மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், இந்திய குடும்பங்களுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அது தொடர்பான முக்கிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உஜ்வாலா திட்டத்தில் முக்கிய மாற்றம்.. இனி 9 அல்ல, 4 போதும்.. என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Oct 2026 16:34 PM IST

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (PMUY – Pradhan Mantri Ujjwala Yojana) கீழ் மத்திய அரசு (Central Government Of India) இந்திய குடும்பங்களுக்கு எல்பிஜி சமையல் எரிவயு சிலிண்டர் (LPG Gas Cylinder) இணைப்புகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், சிலிண்டர் இணைப்புக்கான புதிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அதாவது, உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உஜ்வாலா திட்டத்தில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்ட அரசு

ஈரான் போர் உள்ளிட்டவற்றின் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்பிஜி சிலிண்டர் புதிய இணைப்புகளை பெறுவது மற்றும் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் கால அவகாசம் ஆகியவற்றில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டது. இந்த நிலையில் தான் PMUY திட்டத்தில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9-ல் இருந்து 4 ஆக அரசு குறைத்துள்ளது. அதாவது, இனி உஜ்வாலா பயனர்கள் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களுக்கு பதிலாக, 4 சிலிண்டர்களை நிரப்பினால் அவர்கள் ஒரு சிலிண்டருக்கு ரூ.300 விகிதம் பெறுவார்கள்.

இதையும் படிங்க : ராயல் என்ஃபீல்டின் நிறம் மாறும் பைக்.. 125 பேர் மட்டுமே வாங்க முடியும்? ஏன் இந்த ஸ்பெஷல்?

எல்பிஜி சிலிண்டர் : மானியத்திற்கான புதிய விதிகள்

இது தொடர்பாக சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், உஜ்வாலா குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல் நான்கு சிலிண்டர் நிரப்பும்போது ஒரு சிலிண்டருக்கு ரூ.300 வீதம் அதாவது ஒரு பயனாளிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,200 வழங்கப்படும் என கூறியுள்ளது. முன்னதாக இந்த மானியத்தை பெற உஜ்வாலா பயனாளிகள் 9 சிலிண்டர்களை நிரப்ப வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது அது 4 ஆக குறைகப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ETF முதலீடுகள்.. SEBI விடுத்த தற்காலிக தடை.. யார் யாரை பாதிக்கும்?

இந்தியாவில் தற்போது ஒரு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.942-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உஜ்வாலா திட்டத்தில் கிடைக்கும் மானியத்தின் மூலம் பயனர்கள் ஒரு கேஸ் சிலிண்டரை வெறும் ரூ.642-க்கு வாங்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us