AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவையில் கனமழை: லாலி ரோடு வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்!

கோவையில் கனமழை: லாலி ரோடு வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்!

Sekaran S
Sekaran S | Published: 20 Oct 2026 20:32 PM IST

கோவை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் லாலி ரோடு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்த மழையால், முறையான வடிகால் வசதியின்றி லாலி ரோடு பகுதியில் உள்ள தாழ்வான வீடுகளுக்குள் மழைநீருடன் சாக்கடை நீரும் புகுந்தது.

இதனால் வீடுகளில் இருந்த படுக்கைகள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேதமடைந்தன. திடீரென வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவித்த மக்கள், பாத்திரங்களைக் கொண்டு நீரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

Follow Us