கோவையில் ரோபோக்களே ஊதுபத்தி காட்டி வழிபாடு! வித்தியாசமான ஆயுத பூஜை வீடியோ வைரல்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரோபோ விற்பனை நிறுவனத்தில் நடைபெற்ற வித்தியாசமான ஆயுத பூஜை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல்வேறு தொழில்துறைத் தேவைகளுக்கான நவீன ரோபோக்களை விற்பனை செய்து வரும் இந்நிறுவனத்தில், ஆயுத பூஜையை முன்னிட்டு ரோபோக்கள் மற்றும் உபகரணங்களுக்குச் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இதில், ரோபோக்களுக்குப் பாரம்பரிய உடைகள் அணிவித்து வரிசையாக நிறுத்தியிருந்தனர்.

ஊழியர்கள் கற்பூரம் காட்டி வழிபட்ட நிலையில், ரோபோக்களும் ஊதுபத்தி காட்டி வழிபடுவது போன்ற செயல்களைச் செய்தன. நவீன தொழில்நுட்பத்தையும் பாரம்பரிய வழிபாட்டு முறையையும் இணைக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரோபோக்களே ஊதுபத்தி காட்டி வழிபடும் இந்த வித்தியாசமான காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.