சென்னையில் மழைநீர் தேக்கம்.. நள்ளிரவில் ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள்!
சென்னையில் நேற்று மாலை முதல் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, எந்தெந்த பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது, தண்ணீரை வெளியேற்றுவதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மழைநீரை அகற்ற வேண்டிய பகுதிகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உதவி பெறுவதற்காக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து 1913 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். புகார்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான உதவிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் தேக்கம்.. நள்ளிரவில் ஆய்வு செய்த அதிகாரிகள்
கோவையில் 2,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சி!
திமுக பொதுக்கூட்டத்தில் குடைகளை எடுக்க முண்டியடித்த தொண்டர்கள்!
முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு.. ரோடு ஷோவில் திரண்ட மக்கள்!