கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரம்.. இரவு முழுவதும் கொட்டிய கனமழை!
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று மாலை முதல் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பதிவானது.

தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. குனியமுத்தூர் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சிவானந்தா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கையைத் தொடர்ந்து, இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.