பச்சைமலையில் 32 கிராம மக்கள் 9 மணி நேரம் சாலை மறியல்!
திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதிக்கு உட்பட்ட பச்சைமலையில் உள்ள வன்னாநாடு, கோம்பை ஊராட்சிகளைச் சேர்ந்த 32 கிராம மக்கள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக சாலை சீரமைப்புக் கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என துறையூர் எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீது மக்கள் குற்றம்சாட்டினர். மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, 500-க்கும் மேற்பட்டோர் மரங்களை வெட்டி சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, 9 மணி நேரத்திற்குப் பிறகு போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.
மின்சாரக் கொள்முதலில் மெகா ஊழல்; தவெக அரசு மீது குற்றச்சாட்டு
பச்சைமலையில் 32 கிராம மக்கள் 9 மணி நேரம் சாலை மறியல்!
தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் சென்ற தனியார் பேருந்து!
தமிழக முதல்வர் விஜய் கனகதுர்கை அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்!