மின்சாரக் கொள்முதலில் மெகா ஊழல்; தவெக அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சாரக் கொள்முதலில் யூனிட்டுக்கு ₹35 என அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் திட்டம், மின்வாரியத்தின் கடன் சுமையை அதிகரிப்பதுடன், மெகா ஊழல் திட்டமாகவும் இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சாரக் கொள்முதலில் யூனிட்டுக்கு ₹35 என அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் திட்டம், மின்வாரியத்தின் கடன் சுமையை அதிகரிப்பதுடன், மெகா ஊழல் திட்டமாகவும் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், இடைத்தேர்தலில் பணபலம் மற்றும் அதிகார பலத்தால் தவெக வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுவதை மறுத்த அவர், காவிரி நீரைப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பேசிய இபிஎஸ், அப்பணிகள் அதிகாரிகள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றதாகவும், தற்போது குற்றம்சாட்டுவது பொருத்தமற்றது என்றும் தெரிவித்தார்.
மின்சாரக் கொள்முதலில் மெகா ஊழல்; தவெக அரசு மீது குற்றச்சாட்டு
பச்சைமலையில் 32 கிராம மக்கள் 9 மணி நேரம் சாலை மறியல்!
தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் சென்ற தனியார் பேருந்து!
தமிழக முதல்வர் விஜய் கனகதுர்கை அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
