AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
பறக்கும் பூச்சிகளால் நரகத்தை சந்திக்கும் கிராமம்.. கோவையில் மக்காச்சோளக் குடோனால் அவதிப்படும் மக்கள்!

“பறக்கும் பூச்சிகளால் நரகத்தை சந்திக்கும் கிராமம்”.. கோவையில் மக்காச்சோளக் குடோனால் அவதிப்படும் மக்கள்!

Sekaran S
Sekaran S | Published: 13 Oct 2026 14:32 PM IST

Flying Insects Nuisance: கோவை மாவட்டம் காடாம்பாடி பகுதியில் தனியார் மக்காச்சோளக் குடோனில் இருந்து பரவும் பறக்கும் பூச்சிகளால் கிராம மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்கள் பாழ்படுவதுடன் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுவதால் குடோனை மாற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, அக்.13: கிராமப்புறப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் அவ்வப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள காடாம்பாடி ஊராட்சிப் பகுதியில், தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்திற்குச் சொந்தமான மக்காச்சோளக் குடோனில் இருந்து பரவி வரும் ஆயிரக்கணக்கான பறக்கும் பூச்சிகளால் அப்பகுதி மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் நரக வேதனையைச் சந்தித்து வருகின்றனர். பகல் மற்றும் இரவு பாராமல் வீடுகளுக்குள் படையெடுக்கும் இந்தப் பூச்சிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதுடன், உணவுப் பொருட்கள் பாழ்படுவதோடு பல்வேறு உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதாக மக்கள் கண்ணீருடன் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: “சதுரங்க வேட்டை” பட பாணியில் குறைந்த விலைக்குத் தங்கம் தருவதாக ஆசை வார்த்தை.. ரூ.12 லட்சம் சுருட்டிய போலி சாமியார் உட்பட 9 பேர் கைது!

மக்காச்சோளமும் பூச்சித் தொல்லையும்:

கோவை மாவட்டம், காடாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் பிரிவு பகுதியில் பிரபல தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தத் குடோனில் சுமார் 1,000 டன் அளவிலான மக்காச்சோளம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேக்கி வைக்கப்பட்ட மக்காச்சோளத்தில் இருந்து தோன்றியதாகக் கூறப்படும் லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்குப் பெரும் தொல்லையைக் கொடுத்து வருகின்றன. வீடுகளுக்குள் சமைத்து வைக்கப்பட்ட உணவுகள் முதல் பத்திரப்படுத்தப்பட்ட அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்திலும் இந்தப் பூச்சிகள் புகுந்துவிடுவதால், அவற்றைச் சமைத்து உண்ண முடியாத பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.

Follow Us