குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது!
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், இன்று கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கியது. அதாவது கொடிப்பட்டம் வீதி உலா சென்று கோவிலுக்கு வந்த பின்னர் 5 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது தீபாராதனையும் நடைபெற்றது. அதன்பிறகு தசரா பண்டிகைக்காக விரதம் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் காப்பு கட்டிக் கொண்டனர். இந்த விழா அடுத்த 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விழாவின் கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.