தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவும், இயக்குநர் மணிரத்னமும் மீண்டும் ஒரு படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவிடம் ஒரு கதையை மணிரத்னம் கூறியதாகவும், சில காரணங்களால் அந்த படம் அப்போது உருவாகவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அந்த பழைய கதையில் சில முக்கிய மாற்றங்களை செய்து, இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் ஸ்கிரிப்ட்டை புதுப்பித்து சூர்யாவிடம் மீண்டும் கதை சொல்ல மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.