AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
திருப்பூரில் கல்லூரி மாணவர் மீது அரிவாள் வெட்டுத் தாக்குதல்... சிகிச்சை பலனின்றி மரணம்

திருப்பூரில் கல்லூரி மாணவர் மீது அரிவாள் வெட்டுத் தாக்குதல்… சிகிச்சை பலனின்றி மரணம்

Sekaran S
Sekaran S | Published: 10 Oct 2026 20:51 PM IST

திருப்பூர் ஏபிடி சாலை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் ஸ்ரீஹரி. இவர் கொடுவாய் அருகே உள்ள ஏ.ஜி. தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த ஸ்ரீஹரியைப் பின்தொடர்ந்து வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

திருப்பூர் ஏபிடி சாலை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் ஸ்ரீஹரி. இவர் கொடுவாய் அருகே உள்ள ஏ.ஜி. தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த ஸ்ரீஹரியைப் பின்தொடர்ந்து வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த ஸ்ரீஹரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீஹரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கே.வி.ஆர். நகர் போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us