AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
விசில் அடித்த பயணிகள் புகார் – பெருந்துறை உணவகத்தில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு

விசில் அடித்த பயணிகள் புகார் – பெருந்துறை உணவகத்தில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு

Sathis S
Sathis S | Published: 08 Oct 2026 08:12 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மற்றும் தனியார் பேருந்து பயணிகளிடமிருந்து உணவின் தரம் மற்றும் கழிப்பறை சுகாதாரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று (07.10.2026) இரவு 9 மணியளவில் பயணவழி உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்துகளில் இருந்த பயணிகளிடம் உணவின் தரம், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா மற்றும் கழிப்பறை தூய்மை குறித்து அமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்தார். பயணிகள் நீண்டநாள் புகார்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து உணவக சமையலறை மற்றும் விற்பனைப் பகுதிகளை ஆய்வு செய்தபோது, பொதுமக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த சில உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரமற்ற முறையிலும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தரமற்ற உணவை விற்பனை செய்து பயணிகளின் உடல்நலத்துடன் விளையாடக் கூடாது என உணவக உரிமையாளரை அமைச்சர் எச்சரித்தார். மேலும், விதிமீறல் குறித்து அதிகாரிகளுக்கு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அமைச்சரின் திடீர் ஆய்வுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

Follow Us