இரண்டு முக்கிய சாதனைகளைத் தவறவிட்ட ஜெயிலர் 2 படம்!

×

இரண்டு முக்கிய சாதனைகளைத் தவறவிட்ட ஜெயிலர் 2 படம்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது. வெளிநாடுகள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தப் படம் புதிய சாதனைகளைப் படைத்தது. ஆனால், இவ்வளவு பெரிய வெற்றிக்குப் பிறகும் இரண்டு முக்கியமான பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை மட்டும் ஜெயிலர் 2 தவறவிட்டுள்ளது. முதலில், தமிழக வசூலைப் பொறுத்தவரை ஜெயிலர் 2 திரைப்படம் மொத்தமாக 221 கோடி ரூபாய் கிராஸ் வசூல் செய்துள்ளது. இருப்பினும், 2023ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் லியோ திரைப்படம் தமிழகத்தில் 224 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்தச் சாதனையை ஜெயிலர் 2 படத்தால் முறியடிக்க முடியவில்லை. இதனால் தமிழக பாக்ஸ் ஆபீஸில் விஜய்யின் லியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெறும் 3 கோடி ரூபாய் வித்தியாசத்தில் ஜெயிலர் 2 இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், தெலுங்கு மாநிலங்களிலும் ஜெயிலர் 2 எதிர்பார்த்த 100 கோடி ரூபாய் வசூல் மைல்கல்லை எட்டவில்லை. முதல் வாரத்திலிருந்தே நல்ல வசூலைப் பெற்ற இந்தப் படம், முழுமையான திரையரங்கு ஓட்டத்தின் முடிவில் 99.65 கோடி ரூபாய் கிராஸ் வசூலை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் வெறும் 35 லட்சம் ரூபாய் வித்தியாசத்தில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையைத் தவறவிட்டுள்ளது.

Karthikeyan S