பலத்த போலீஸ் பாதுகாப்பு.. தாராபுரத்தில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..
தாராபுரத்தைப் பொருத்தவரையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 22 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
தாராபுரத்தைப் பொருத்தவரையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 22 வேட்பாளர்கள் களமிறங்கினர். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன் பிறகு, கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தபால் வாக்குகளையும் சேர்த்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்குவார்கள்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் தேர்தல் முடிவுகளை அறியத் திரள்வார்கள் என்பதால், வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
