மேட்டூர் அருகே 3 மாதங்களாக கிராம மக்களுக்கு அச்சுறுத்தல் – வசமாக சிக்கிய சிறுத்தை
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கண்ணாமூச்சி வனப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வந்தது. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் குடியிருப்புகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் ஆடுகள் நாய்கள் பசுவின் கன்றுகளை சிறுத்தை வேட்டையாடியது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு வனத்துறையினரிடம் வசமாக சிக்கியது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கண்ணாமூச்சி வனப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக சிறுத்தை ஒன்று நடமாடி வந்தது. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் குடியிருப்புகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் ஆடுகள் நாய்கள் பசுவின் கன்றுகளை சிறுத்தை வேட்டையாடியது. இதனால் கிராம மக்கள்அச்சம் அடைந்தனர். மேட்டூர் வனச்சரகர் செங்கோட்டையன் சென்னம்பட்டி வனச்சரகர் ராஜ்குமார் மற்றும் சேலம் ஈரோடு மாவட்டம் வனத்துறையினர் இணைந்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன எட்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. நீண்ட நாட்களாக சிறுத்தை பிடிபடாத காரணத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஈரோடு சேலம் மாவட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சிறுத்தை பிடிக்க சேலம் மாவட்ட ஈரோடு மாவட்ட வனத்துறையினரும் தீவிர முயற்சி மேற்கொண்டனர். நேற்று இரவு கண்ணாமூச்சி வனப்பகுதியை ஒட்டிய மிளகாய் பொதைபகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. இந்த சிறுத்தையின் வயது என்ன ஆண் சிறுத்தையா பெண் சிறுத்தையா என்பதை தெரியவில்லை. சிறுத்தை ஆக்ரோஷமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் வந்த பிறகு அது குறித்து விவரங்கள் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
