AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ஸ்ரீரங்கம் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமை வழிபாடு – திரளான பக்தர்கள் தரிசனம்!

Deepan
Deepan | Published: 10 Oct 2026 11:22 AM IST

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில், புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் அரங்கநாதரையும், தாயாரையும் தரிசித்தனர். திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

கோவில் வளாகத்தில் “ரங்கா, ரங்கா, கோவிந்தா” என்ற பக்தி முழக்கங்கள் எதிரொலித்தன. புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோவில் நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Follow Us