அது AI வீடியோ – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாராபுரம் தொகுதி வேட்பாளரான சத்தியபாமாவின் 31 கோடி ரூபாய் வீடியோ வெளியான தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''அது ஏ ஐ வீடியோ தான், ஸ்டாலின் சார் 1000 கோடி ரூபாய் செலவு செய்தது போல, நானும் ஒரு AI வீடியோவை வெளியிடுவேன். பார்க்கிறீர்களா என்று கூறினார்.
சென்னையில் வில்லிவாக்கம் தொகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அயனாவரம் சமூக நல மையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் தங்க மோதிரங்களை அணிவித்தார், அதனை தொடர்ந்து அங்கிருந்த சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்து அங்கிருந்து மாணவர்களுடன் கைப்பந்து விளையாட்டுகளை விளையாடினார். அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாராபுரம் தொகுதி வேட்பாளரான சத்தியபாமாவின் 31 கோடி ரூபாய் வீடியோ வெளியான தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ”அது ஏ ஐ வீடியோ தான், ஸ்டாலின் சார் 1000 கோடி ரூபாய் செலவு செய்தது போல, நானும் ஒரு AI வீடியோவை வெளியிடுவேன். பார்க்கிறீர்களா என்று கூறினார்.
முன்னதாக இதுகுறித்து விளக்கம் அளித்த தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா, திட்டமிட்டுத் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இணையதளங்களில் போலி வீடியோவைப் பரப்பியவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் முறைப்படி புகார் அளிக்க உள்ளதாகவும் சத்தியபாமா உறுதிபடத் தெரிவித்தார். மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும், இத்தகைய சோடிக்கப்பட்ட சர்ச்சைகளைக் கடந்து தவெக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
