AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
மகாளய அமாவாசை: ஹார்பர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – திரண்ட பொதுமக்கள்

மகாளய அமாவாசை: ஹார்பர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் – திரண்ட பொதுமக்கள்

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Oct 2026 07:57 AM IST

மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஹார்பர் கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். கடற்கரையில் எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்து, மறைந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் ஆன்மிக மரபில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஹார்பர் கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் திரண்டு தங்களது முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். கடற்கரையில் எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்து, மறைந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் ஆன்மிக மரபில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. மாதாந்திர அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்யத் தவறியவர்களும் இந்நாளில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது சிறப்பானது என்பது நம்பிக்கை. மேலும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் வழங்குவதும் புண்ணியச் செயல்களாகப் போற்றப்படுகின்றன. முன்னோர்களின் ஆசியால் குடும்பத்தில் ஆரோக்கியம், அமைதி மற்றும் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர். இதனால் ஹார்பர் கடற்கரைப் பகுதியில் ஆன்மிகச் சூழல் நிலவியது.

Follow Us