AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
சூலூர் அருகே R15 பைக் திருட்டு: ஸ்டார்ட் ஆகாததால் தள்ளிச் சென்ற கொள்ளையர்கள் – CCTV காட்சி வைரல்

சூலூர் அருகே R15 பைக் திருட்டு: ஸ்டார்ட் ஆகாததால் தள்ளிச் சென்ற கொள்ளையர்கள் – CCTV காட்சி வைரல்

Sekaran S
Sekaran S | Published: 06 Oct 2026 07:39 AM IST

கோவை, சூலூர் அருகே கணியூர் பகுதியில் நள்ளிரவில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த யமஹா R15 இருசக்கர வாகனம் திருடப்பட்டது. நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அங்கு வந்த இரண்டு வடமாநில இளைஞர்கள், சுற்றுமுற்றும் நோட்டமிட்டு, கள்ளச் சாவியைப் பயன்படுத்தி பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றுள்ளனர்.

கோவை, சூலூர் அருகே கணியூர் பகுதியில் நள்ளிரவில் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த யமஹா R15 இருசக்கர வாகனம் திருடப்பட்டது. நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அங்கு வந்த இரண்டு வடமாநில இளைஞர்கள், சுற்றுமுற்றும் நோட்டமிட்டு, கள்ளச் சாவியைப் பயன்படுத்தி பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றுள்ளனர். நீண்ட நேரம் முயன்றும் பைக் ஸ்டார்ட் ஆகாததால், யாராவது வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், பைக்கை தள்ளிக்கொண்டே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காலையில் பைக் காணாமல் போனதை அறிந்த உரிமையாளர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் இருவர் கள்ளச் சாவி மூலம் பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்று, பின்னர் தள்ளிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.

Follow Us