AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு – 10 கி.மீ. ரோடு ஷோவில் திரண்ட மக்கள்!

கோவையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு – 10 கி.மீ. ரோடு ஷோவில் திரண்ட மக்கள்!

Sekaran S
Sekaran S | Published: 16 Oct 2026 13:46 PM IST

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து, அவிநாசி சாலை வழியாக விழா நடைபெறும் காந்திபுரம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார்.

திறந்த வாகனத்தில் சென்றபடி மக்களைச் சந்தித்த அவருக்கு, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அவிநாசி சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், ஏராளமானோர் விஜயைக் காணக் குவிந்தனர். அவரைக் கண்டதும் தமிழக வெற்றிக் கழகம் என்ற முழக்கங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல் முறையாக கோவை சென்றுள்ளதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

Follow Us