கோவையில் 2,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சி!
கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோவிலில், 10-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு 2,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான இன்று, குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளுடன் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் நவக்கிரகத் தலங்கள், திருமண விருந்து, விவசாயம், கிராமங்கள், ஜல்லிக்கட்டு, கரகாட்டம், கிருஷ்ண லீலை, திருக்கைலாயம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, இந்திர சபையில் கிரிக்கெட் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. மேலும், மரப்பாச்சி பொம்மைகள், சித்தர்கள், திருவிளக்கு பூஜை மற்றும் சஞ்சீவி மலை உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பக்தர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. கண்காட்சிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கோவையில் 2,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சி!
திமுக பொதுக்கூட்டத்தில் குடைகளை எடுக்க முண்டியடித்த தொண்டர்கள்!
முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு.. ரோடு ஷோவில் திரண்ட மக்கள்!
கோவையில் தனது பழைய ரசிகரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய CM விஜய்!