கோவையில் தொடரும் பைக் திருட்டு.. நீலாம்பூரில் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள்!
கோவை, நீலாம்பூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பல்சர் பைக்கை, மாஸ்க் அணிந்து வந்த இருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நீலாம்பூர் நிலா ரெசிடென்சி பகுதியில் வசிக்கும் ரஞ்சித் என்பவர், தனது பஜாஜ் பல்சர் பைக்கை (TN 59 CV 8922) கடந்த 14ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், பைக்கை நோட்டமிட்டு லாவகமாகத் திருடிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கோவையில் தொடர்ந்து வாகனத் திருட்டுகள் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் தொடரும் பைக் திருட்டு.. மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள்
சென்னையில் மழைநீர் தேக்கம்.. நள்ளிரவில் ஆய்வு செய்த அதிகாரிகள்
கோவையில் 2,000-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சி!
திமுக பொதுக்கூட்டத்தில் குடைகளை எடுக்க முண்டியடித்த தொண்டர்கள்!