AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ரேஷன் இலவச அரிசியே 'சன்ன ரக' அரிசியாக ரூ.30க்கு விற்பனை? சேலம் கூட்டுறவு அங்காடியில் அதிர்ச்சி

ரேஷன் இலவச அரிசியே ‘சன்ன ரக’ அரிசியாக ரூ.30க்கு விற்பனை? சேலம் கூட்டுறவு அங்காடியில் அதிர்ச்சி

Sathis S
Sathis S | Published: 18 Oct 2026 21:57 PM IST

கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூபாய் 30 க்கு விற்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இலவசமாக நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசியை தன்னடகு அரிசி என்று கூட்டுறவு அங்காடியில் ரூபாய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்த வினோதம் சேலத்தில் நிகழ்ந்தது.

இலவசமாக நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசியை தன்னடகு அரிசி என்று கூட்டுறவு அங்காடியில் ரூபாய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்த வினோதம் சேலத்தில் நிகழ்ந்தது. கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூபாய் 30 க்கு விற்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி சேலம் பழைய பேருந்து நிலையம் பொன்னி கூட்டுறவு அங்காடியில் சன்ன அரிசி விற்பனை இன்று துவங்கியது. இதனை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். சமீப காலமாக அரிசி விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூபாய் 30 க்கு நல்ல அரிசி கிடைப்பதாக மகிழ்ச்சி அடைந்தனர். கூட்டுறவு வங்காடியில் விற்பனை செய்த அரிசியை விலை கொடுத்து வாங்கி சென்ற பொதுமக்கள் சற்று நேரத்தில் திரும்பி வந்து அரிசிக்கு பதிலாக பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டதால் ஊழியர்கள் வியப்படைந்தனர். கூட்டுறவு அங்காடியில் விற்பனை செய்யப்பட்ட அரிசி நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியாக இருந்தது. இதனை விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக நியாய விலை கடையிலேயே இந்த அரிசியை பெற்றுக் கொள்கிறோம் என்று திருப்பி கொடுத்தனர். சன்ன ரக அரிசி என்று கூறி நியாய விலை கடை அரிசியை விற்பனை செய்து மக்களை ஏமாற்றிய வினோதம் சேலத்தில் நடைபெற்றுள்ளது.

Follow Us